Skip to content

சொல் பொருள்

1 (வி) 1. பொருந்தியிரு, அமைந்திரு, 2. மிகு, நிறைந்திரு,, 3. சிறப்புடன் அல்லது பெருமையுடன் இரு

2. (பெ) உழும்போது கொழு நிலத்தில் ஏற்படுத்தும் நீண்ட பள்ளம்

நீர் வைக்கும் பெருங்கலமும், நீர் இறைக்கும் பெருங்கூனையும் சால் எனப்படும்.

சொல் பொருள் விளக்கம்

நீர் வைக்கும் பெருங்கலமும், நீர் இறைக்கும் பெருங்கூனையும் சால் எனப்படும். சால் போல் பெரியதாகவும் தவசம் போட்டு வைப்பதற்கு உரியதாகவும் உள்ள குதிரைச் சால் என்பது பழனி வட்டார வழக்கு.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be constituted, comprise, be abundant, full, be great, noble, furrow in ploughing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி – சிறு 246

வலிமை பொருந்திய வெற்றியோடே பகைவரின் நிலத்தைக் காலிசெய்து,

நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி – மலை 554

உயர்ந்த மலையிலிருந்து கீழேவிழுகின்ற நீர்ப்பெருக்கு நிறைந்த அருவியின்

அணங்கு சால் அரிவையை காண்குவம் – அகம் 114/15

தெய்வம் போல் சிறந்த நம் தலைவியைக் காண்போம்

குடி நிறை வல்சி செம் சால் உழவர் – பெரும் 197

குடியிருப்பு நிறைந்த, உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *