சொல் பொருள்
பயற்று நெற்று அல்லது தவசக் கதிர் பயறோ, தவச மணியோ கொள்ளாமல் இருந்தால் அதனைச் சாவட்டை என்பது முகவை வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
பயற்று நெற்று அல்லது தவசக் கதிர் பயறோ, தவச மணியோ கொள்ளாமல் இருந்தால் அதனைச் சாவட்டை என்பது முகவை வட்டார வழக்கு. சாக அடிக்கப்பட்டது, சாகடிக்கப்பட்ட நோய் உடையது என்னும் பொருளில் வழங்குகின்றது. அட்டை என்பது சொல்லீறு. எ-டு; சப் பட்டை, சில்லட்டை. பதர், பதடி என்பவற்றை எண்ணலாம். சாவி என்பது செத்துப்போனது என்னும் பொருளில் வழங்குவது பொது வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்