சொல் பொருள்
சிங்கி தட்டல் (சாலராப்போடல்) – ஒத்துப்பேசுதல்.
சொல் பொருள் விளக்கம்
சிங்கி ஒரே சீராக ஒரே போக்காக ஒலித்துக் கொண்டிருப்பதாம். இதனை இசைக்க, மற்றை மற்றைக் கருவியிசைஞர்க்கு வேண்டுவது போல் பெரிய நுட்பமான தேர்ச்சி வேண்டுவதில்லை. அவர்கள் விடாமல் தாளம் போடுவதே கடமையாக உள்ளது. அவர்களுக்கெனத் தனிப்பட இசைப்பும் இல்லை. பிறர்க்கு ஒத்துப் பின் தாளம் போடுவதே வேலையாதலால், தமக்கென ஒரு கருத்து இல்லாது, எவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு ஒத்துப் பேசுவதைச் ‘சிங்கிப்போடல்’ என்பதும் இது. ‘ஒத்தூதல்’ என்பதும் வழக்கே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்