சொல் பொருள்
சல்லடை, வடிகட்டி என்பவற்றைச் சிப்பிலி, சிப்பிலித் தட்டு என்பது முகவை வட்டார வழக்கு
யாழ்ப்பாண வழக்கில், தொட்டில் என்பது சிப்பிலி என வழங்கப்படுகின்றது
சொல் பொருள் விளக்கம்
சல்லடை, வடிகட்டி என்பவற்றைச் சிப்பிலி, சிப்பிலித் தட்டு என்பது முகவை வட்டார வழக்கு. பிலிற்றுதல் என்பது ஒழுகவிடுதல், வடிய – வழிய – விடுதல் என்னும் பொருளில் இலக்கிய ஆட்சியுடையது. எ-டு: தேன் பிலிற்றும். சிறிது சிறிதாக வடிக்கும் தட்டு சிப்பிலியாயது. யாழ்ப்பாண வழக்கில், தொட்டில் என்பது சிப்பிலி என வழங்கப்படுகின்றது. தொங்குதல் வழியாக ஏற்பட்ட வழக்கு ஆகலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்