சொல் பொருள்
(வி) 1. பிணக்கம் கொள், 2. சிதறு,
சொல் பொருள் விளக்கம்
1. பிணக்கம் கொள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
feign anger, scatter
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார் சிரறுபு சீற சிவந்த நின் மார்பும் – கலி 88/12,13 ஒளிரும் மலர்கள் வாடிநிற்கும் உன் தலைமாலையும், நல்ல அந்த பரத்தையர் பிணக்கம் கொண்டு சீற்றத்துடன் அடித்ததால் சிவந்துபோன உன் மார்பும் வரை_அகம் நண்ணி குறும் பொறை நாடி தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின் புள்ளி_இரலை – பதி 74/7-10 பெரிய மலைகளின் சென்று, சிறிய குன்றுகளில் தேடி, அலைந்துதிரிவோர் பிடித்துக்கொண்டு வந்த பரவலான பளிச்சென்ற புள்ளிகளையுடைய, கிளைத்துப் பிரிந்த கோலைப் போன்ற பிளவுபட்ட கொம்பினையுடைய, புள்ளி மானின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்