சொல் பொருள்
சிறுவர் – சிறிய வயதுடையவர்.
சிறியர் – சிறுமைத்தன்மையுடையவர்.
சொல் பொருள் விளக்கம்
முன்னது அகவை கருதியது; பின்னது, தன்மை கருதியது. இரண்டும் பால்பொதுமை கருதியவை. சிறியர் என்பதைச் “செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர், செயற்கரிய செய்கலா தார்” என்னும் குறளால் (குறள் 26) அறியலாம். “நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்” என்னும் கம்பர் வாக்கில் சிறுவர் நிலை தெளிவாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்