சொல் பொருள்
சொல்வதை முகம் கொடுத்துக் கேளாமல் திருப்புதலைச் சிலுப்புதல் என்பது முகவை வழக்கு
சிலுப்பி என்பதற்குத் தோசை புரட்டும் கரண்டி என்னும் வழக்கு உசிலம்பட்டி வட்டார வழக்கு ஆகும்
மோர் கடைதலைச் சிலுப்புதல் என்பது நெல்லை வழக்கு
சொல் பொருள் விளக்கம்
சொல்வதை முகம் கொடுத்துக் கேளாமல் திருப்புதலைச் சிலுப்புதல் என்பது முகவை வழக்கு. சிலுப்பி என்பதற்குத் தோசை புரட்டும் கரண்டி என்னும் வழக்கு உசிலம்பட்டி வட்டார வழக்கு ஆகும். மோர் கடைதலைச் சிலுப்புதல் என்பது நெல்லை வழக்கு. சிலம்புதல் ஒலித்தல் என்னும் பொருளில் இருவகை வழக்கிலும் உண்டு. சிலம்பாட்டம்; “மனைச் சிலம்புவ மங்கல வள்ளையே” கம்பர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்