சொல் பொருள்
சிலுப்புதல் – மறுத்தல், மறுத்து ஒதுங்குதல்
சொல் பொருள் விளக்கம்
மாடு சினம் சீற்றம் உடையது எனின் கொம்பை வளைத்துக் குத்துவதற்கு வரும். அவ்வாறு வருவதைச் சிலுப்புதல் என்பர். “என்ன சிலுப்புகிறாய்; பூசை வேண்டுமா?” என்று அடிப்பர், ஆயினும் சிலுப்புதலை அத்தகைய மாடுகள் விடா, கொம்பை ஆட்டி அசைத்துத் திருப்புதலே சிலுப்புதலாம். மோர் கடைதலை மோர் சிலுப்புதல் என்னும் வழக்கமும் உண்டு. இவ்வழக்கங்களில் இருந்து ஒருவர் ஒன்றைக் கூறும்போது அதனை ஏற்றுச் செய்யாமல் போ, பார்க்கலாம்’ என ஏவியவர்கள் இரைவர். இங்குச் சிலுப்புதல் மறுத்தல் பொருளது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்