சொல் பொருள்
சில்வாரி – சின்னத் தனமானவன்
சொல் பொருள் விளக்கம்
‘சில்’ என்பது சிறுமைப் பொருளது, ‘வாரி’ என்பது ‘மானவாரி’ என்பதில் உள்ளது போன்றது. இச்சொல் வானவாரி என்பது. வான்மழையை நம்பிய நிலம் ‘வான வாரி’யாம். வாரியாவது வருவாய். புன்செய் நிலத்திலும் கிணறு இல்லாக்கால் வானவாரி என்றும் வானம் பார்த்தது என்றும் கூறப்படும். சின்னத்தனமான வழிகளில் பொருள்தேடிக் காலங்கழிப்பவன் சில்வாரி, சில்லவாரி எனப்படுவான். இதனைச் சல்லவாரி என்பதும் வழக்கு. சல்ல என்பது சள்ளை என்பதன் திரிபாம். பிறர்க்குச் சள்ளை – ஓயாத் தொல்லை – தந்து பொருள் தேடுவது சள்ளைவாரித் தன்மையாம். “அவன் சில்வாரி, எப்பொழுதும் காலை வாரி விடுவான்” என்பது எச்சரிக்கை வழக்கம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்