சொல் பொருள்
(வி) 1. பொருந்து, 2. கல,
சொல் பொருள் விளக்கம்
1. பொருந்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
go with, mix
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மணி புரை செ வாய் மார்பு_அகம் சிவண புல்லி – அகம் 66/14,15 (புதல்வனின்) பவளமணியினை ஒத்த சிவந்த வாய் தனது மார்பகத்தே பொருந்த எடுத்துத் தழுவி துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு – புறம் 328/11 துடுப்பினால் நன்கு கலக்கப்பட்ட களிப்பைத் தன்பால்கொண்ட வெள்ளிய சோற்றை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்