சொல் பொருள்
சிவப்புக்கொடி காட்டல் – தடுத்தல்
சொல் பொருள் விளக்கம்
சிவப்புக்கொடி காட்டினால் தொடர் வண்டி நிற்க வேண்டும் என்பது பொருள். ஆதலால் சிவப்பு தடைப்படுத்தத்திற்குச் சான்றாயிற்று. எப்பொழுது சிவப்புக்கொடி மாறிப் பச்சைக் கொடி காட்டுவார்களோ தெரியவில்லை. அது வரையிலும் திருமணப் பேச்சை எடுக்க முடியாது எனத் தவிக்கின்றவர் பலர். சிவப்பு தடையாவது, எங்கெங்கும் விளம்பரப் பொருளாகி விட்டது! சிவப்பு முக்கோண மில்லாத ஓரிடம் உண்டா இரண்டுக்கு மேல் வேண்டா என்பதும் வேண்டாததாய், ஒன்றே போதும் என்றன்றோ விளம்பரப்படுகிறது. ஆயினும் குறைக்க முடிகிறதா ‘நினைப்பவர் மனமே கோயில்’ என்பது சிவப்புக்கும் தான். சிவப்பு விளக்குப் பகுதி எனச் சீரழிவுப் பகுதி ஒன்று பெருநகர்களிலெல்லாம் இருந்தது உண்டு. அது நாட்டின் சீர்கேடு!
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்