சொல் பொருள்
சீண்டுதல் – தொல்லை தருதல்
சொல் பொருள் விளக்கம்
சீண்டுதல் என்பது தீண்டுதல் என்னும் சொற்போலத் தொடுதல் என்னும் பொருள் தருவது. ஆனால், தொடுதல் பொருளிலும் இத்தொடுதல் எரிச்சலையூட்டுகின்ற அல்லது அருவறுப்பை உண்டாக்குகின்ற தொடுதலாம். சினத்தில் ‘அரிசினம்’ என்பதொன்று, அஃது ஓயாமல் தொல்லை தருதலால் உண்டாகும் சினம். அச்சினம் உண்டாகுமாறு பாடாகப்படுத்துதலே சீண்டுதலாம் . “என்னதான் பொறுத்தாலும், என்னதான் உதவி செய்தாலும் அவன் சீண்டுவதை விடமாட்டான்” என்பது வழங்குமொழி.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்