சொல் பொருள்
(பெ) 1. காற்றால் அடித்துக்கொண்டு வரப்படுவது, 2. கோட்டைக் கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழவிடும் மரம்
சொல் பொருள் விளக்கம்
1. காற்றால் அடித்துக்கொண்டு வரப்படுவது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
That which is wafted, as fragrance by wind
Wooden brace to a door, driven into the ground in bolting
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம் கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது துனியல் நனி நீ நின் சூள் – பரி 8/53-55 பெரிதும் வருந்தாதே! மலர் போன்ற மையுண்ட கண்களையுடையவளே! நீ சொல்வது உண்மை அன்று; இந்த மணம் பழங்களிலும், மலர்களிலும், வீசுகின்ற காற்றினால் அடித்துக்கொண்டுவந்ததாலும் உண்டானது, வருந்தாதே மிகவும் நீ! உன் மீது ஆணை!” ஏணியும் சீப்பும் மாற்றி மாண் வினை யானையும் மணி களைந்தனவே – புறம் 305/5,6 ஏணியையும், தாங்கு கட்டையையும் நீக்கி போரில் மாட்சிமைப்பட்ட யானைகளின் மணிகள் நீக்கப்பட்டன.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்