1.சொல் பொருள்
கூட்டுமாறு, பெருக்குமாறு என வழங்கப்படும் வாரியல் பெரிய குளம் வட்டாரத்தில் சீமாறு என வழங்கப்படுகின்றது
2. சொல் பொருள் விளக்கம்
கூட்டுமாறு, பெருக்குமாறு என வழங்கப்படும் வாரியல் பெரிய குளம் வட்டாரத்தில் சீமாறு என வழங்கப்படுகின்றது. சீத்தல் என்பது துடைத்தல், நீக்கல் என்னும் பொருளது. சீத்தலுக்கு உரியமாறு சீமாறு ஆயது. ‘கால் சீக்கும்’ என்பது இலக்கிய ஆட்சி. துடைப்பக் கட்டை என்பது போலச்சீவக் கட்டை என்பது கொங்கு நாட்டு வழக்கு. சீமாறு எனவும் வழங்கும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்