சொல் பொருள்
சீர் – சிறந்த பொருள்களை உவந்து தருதல்.
சிறப்பு – முகமும் அகமும் மலரச் சிறந்த மொழிகளால் பாராட்டுதல்.
சொல் பொருள் விளக்கம்
சீர் வரிசை: சீர் செய்தல் எனத் திருமண விழா, பூப்பு நீராட்டுவிழா ஆகியவற்றில் நிகழ்த்தப் பெறும் நிகழ்ச்சிகளால் ‘சீர்’ என்பதன் பொருள் புலப்படும்.
சிறப்பு என்பது உணர்வால் சிறப்பித்தலாம், “ஒப்புடன் முகமலர்ந்து உபசரித்துண்மை பேசி உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும்” என்னும் மொழியில் கொடைப் பொருளைக் கொடுக்கும் தன்மையே மதிப்பீடாக்கல் புலப்படும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்