சொல் பொருள்
சீர் – சிறந்த பொருள் வாய்ப்பு
செனத்து – மக்கட் கூட்டம்.
சொல் பொருள் விளக்கம்
சீர் சிறப்பு என்பதில் சீர் என்பதன் பொருளைக் காண்க. சிறந்த பொருள்களைப் பரிசாக வழங்குவதுடன், பெருங்கூட்டச் சிறப்பும் பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்துதல் கண்கூடு. ஆள் கூட்டங்கண்டே ஒருவன் சிறப்பை மதிப்பிடுதல் உலக நடைமுறை. “அவனுக்கென்ன நாலு பேர் இருக்கிறார்கள்” என்பது ஒரு பாராட்டு.
செனம்-சனம்; செனம், செனனம், செனகன், செனனீ, சென்மம் என்பவை முறையே மக்கள் பிறப்பு, தந்தை, தாய், முற்பிறப்பு என்னும் பொருள்தரும் வடசொற்களாம். அவன் சீர் செனத்தியான ஆள் என்பதும் சீர் செனத்திக்குக் குறைவில்லை என்பதும் வழக்கம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்