சொல் பொருள்
சீலையைக் கிழித்தல் – கிறுக்காதல்
சொல் பொருள் விளக்கம்
துணியைக் கிழித்தல், கிழித்துக் கொண்டிருத்தல் என்பனவும் சீலையைக் கிழித்தல் போல்வதே. கிறுக்கு என்னும் பொருள் தருவதே. மூளைக்கோளாறில் ஒருவகை, அகப்பட்ட துணிகளைக் கிழிப்பதும், அக்கிழிந்த துணியை உடலில் நினைத்த இடங்களிலெல்லாம் கட்டிக் கொள்வதும் ஆகும். அவ்வழக்கில் இருந்தே சீலையைக் கிழித்தல் என்பதற்குக் கிறுக்கு என்னும் பொருள் வந்தது. “எனக்கு அறிவு சொல்கிறாய்! நான் சீலையைக் கிழித்துக் கொண்டா இருக்கிறேன்” என்பது புரியாது பேசுவார்க்குச் சொல்லும் மறுப்புரை.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்