சொல் பொருள்
சற்றே சிவப்பும் மஞ்சளும் கலந்த அந்திமாலை வானம் போன்ற வண்ணம் உடையது என்னும் பொருளது
சொல் பொருள் விளக்கம்
பூவரசம் பூ மஞ்சள் நிறத்தது. மற்றை அரசு பூவாது இது பூத்தலால் பெற்ற பெயர் பூவரசு என்பது. அப் பூ வண்ணமும் அந்தி மாலை வண்ணமும் ஒப்ப இருத்தலைக் கண்டு வழங்கிய சொல் சீவாந்தி. சற்றே சிவப்பும் மஞ்சளும் கலந்த அந்திமாலை வானம் போன்ற வண்ணம் உடையது என்னும் பொருளது. பொதுமக்கள் போற்றும் புலமைத் தோன்றலாகிய தோற்றம் காட்டுவன இன்னவை. இது குமரி மாவட்ட வழக்கு. செவ்வந்தி
என்பதைக் கருதுக.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்