சொல் பொருள்
சுடக்குப்போடல் – இழிவுபடுத்தல்
சொல் பொருள் விளக்கம்
சுடக்கு, சொடக்கு; ஒலிக்குறிப்பு. கைவிரலை மடக்கிச் சுடக்குப் போடல் உண்டு. அன்றியும் இருவிரலைக் கூட்டி ஒலியுண்டாக்கலும் உண்டு. அவ்வாறு ஒலியுண்டாக்கி நாயைக் கூப்பிடல் எவரும் அறிந்தது. “சுடக்குப் போட்டுக் கூப்பிடு” என்றால், நாயைக் கூப்பிடுவது போலக் கூப்பிடு என்பது குறிப்புப் பொருளாம். “நீ பார்! நான் சொன்னபடி செய்யத் தவறினால் சுடக்குப் போட்டுக் கூப்பிடு “என்பது பல்கால் கேட்கும் வஞ்சினச் செய்தியாம். ஒருவருக்கொருவர் உண்டாம் போட்டி, தருக்கம், பகை இவற்றால் சொல்வது இது. ‘வஞ்சினக் காஞ்சி’ புறத்துறையுள் ஒன்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்