சொல் பொருள்
சுட்டி என்பது அதற்காக என்னும் பொருளில் சீர்காழி வட்டாரத்தில் வழங்குகின்றது
சுட்டி, செய்யக்கூடாத செயல்களைச் செய்து துயரூட்டுபவன்.
சொல் பொருள் விளக்கம்
சுட்டித் தனம் என்பது சுட்டி எனப்படுதல் பொது வழக்கு. ஆனால் சுட்டு அடிப்படையில் சுட்டி என்பது அதற்காக என்னும் பொருளில் சீர்காழி வட்டாரத்தில் வழங்குகின்றது. அதைச் ‘சுட்டி’ இப்படியா பேசுவது? அடிப்பது? “என்பது வழக்கு” தென் வட்டாரங்களிலும் இப் பொருள் வழக்கு உண்டு.
‘சுட்டி, என்பது சுட்டெரிப்பவன் என்னும் பொருளில் வருவதாம். அதிலும் ‘படுசுட்டி’ என்பது அவனுக்கும் பெரிய சுட்டி அல்லது சுட்டியில் தேர்ந்த சுட்டி, “என் பிள்ளைகளுள் நல்லவன் கூரைமேல் கொள்ளிக்கட்டையோடு நிற்கிறானே; அவன்தான்” என்றானாம் ஒரு தந்தை. அத்தகையன் செயல் ‘சுட்டி’ விளக்கமாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்