சொல் பொருள்
ஒரு நிலத்தின் முடங்கிய பகுதியைச் சுணக்கு என்பது நெல்லை வழக்கு.
நீர்ச் சுழல் என்னும் பொருளில் வழங்குவது மதுரை வழக்கு
வளைதல் ஒடுங்குதல் பொருளில் சுணக்கு என்பது
பொது வழக்காகத் தென்னகத்தில் இடங்கொண்டுள்ளது எனலாம்
சொல் பொருள் விளக்கம்
ஒரு நிலத்தின் முடங்கிய பகுதியைச் சுணக்கு என்பது நெல்லை வழக்கு. அதனை நீர்ச் சுழல் என்னும் பொருளில் வழங்குவது மதுரை வழக்கு. சொணக்கு என்றும், சோணை என்றும் வழங்குவது முகவை வழக்கு. முடங்கி ஒட்டியுள்ள காதைச் சோணை என்பதும், அக் காதுடையவரைச் சோணைக் காதினர் என்று பட்டப் பெயரிட்டு வழங்குவதும் முகவை வழக்கு. ஆதலால் வளைதல் ஒடுங்குதல் பொருளில் சுணக்கு என்பது பொது வழக்காகத் தென்னகத்தில் இடங்கொண்டுள்ளது எனலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்