Skip to content

சொல் பொருள்

சுண்டு விரல், சுண்டி விளையாடல் என்பவை பொது வழக்கு

சுண்டு என்பது உதடு என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டாரத்தில் வழங்குகின்றது

சொல் பொருள் விளக்கம்

சுண்டு விரல், சுண்டி விளையாடல் என்பவை பொது வழக்கு. உழவர் வழக்கில் சுண்டு கயிறு உண்டு. சுண்டு என்பது உதடு என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டாரத்தில் வழங்குகின்றது. உதட்டுக்கு எப்படி இப்பெயர் வந்தது. “பீடியை இரண்டு சுண்டு சுண்டினால்” என்பது பேச்சு வழக்கு. பீடி குடித்தல் அல்லது பிடித்தலைச் சுண்டு என்பது உண்டு ஆதலால், அதனைச் சுண்டும் உதடு ‘சுண்டு’ எனப்படுதாயிற்று.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *