Skip to content

சுமைதாங்கி

சொல் பொருள்

சுமைதாங்கி – பொறுப்பாளி

சொல் பொருள் விளக்கம்

கால்நடையாகவே பெருவழிச் செலவு இருந்த நாளில் வழிகளில் ஆங்காங்குச் சுமையை இறக்கி வைப்பதற்காகப் போடப்பட்டது சுமைதாங்கி. இவ்வறச் செயலைச் செய்தால் வயிறு வாய்த்து மகவு தங்காமல் போனவர்க்கும் மகவு தங்குமென நம்பிக்கை ஊட்டியமையால் அத்தகையவரும் இவ்வறச் செயலைத் தலைப்பட்டுச் செய்தனர். அச்சுமைதாங்கி எப்படித் தாங்க முடியாச் சுமையைத் தாங்கி உதவுவதுடன், அப்பொருளை வைத்தது வைத்தபடி எடுத்துக்கொண்டு போதற்கும் வாய்ப்பாக உதவுகிறதோ அப்படி, தலைமையாள் இல்லாத குடும்பத்திற்குத் தலைமையாக இருந்து தாங்குவாரைச் சுமை தாங்கி என்பது வழக்காயிற்று. அதனால் சுமைதாங்கி என்பதற்குப் பொறுப்பாளி என்னும் பொருள் வந்தது. குடிதாங்கி என்பவன் ஒரு வள்ளல்! பாடுபுகழ்பெற்றவன்! அவன் பாவம்! இடிதாங்கியாவான்!

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *