சொல் பொருள்
சுரண்டுதல் – சிறிது சிறிதாகக் கவர்தல், உதவி கேட்டல்
சொல் பொருள் விளக்கம்
சொறி சிறங்குக்காகக் கையால் சுரண்டல் உண்டு, களை சுரண்டல், சட்டி பானை சுரண்டல் என்பவையும் சுரண்டுதல் என்பதன் நேர் பொருளன, சுரண்டுதற்குரிய கருவி ‘சுரண்டி’ எனப்படும். ஒருவர் ஒரு பொறுப்பை ஒப்படைத்திருந்தால் அப்பொறுப்பால் வரும் வருவாயைச் சுருங்கச் சுருங்க எடுத்துத் தனக்காக்கிக் கொள்ளல் சுரண்டல் எனப்படும். உழைப்பைச் சுரண்டலும் சுரண்டலே. இச்சுரண்டலில் வேறானது உதவி கேட்டல் பொருள்தரும் சுரண்டல். “என்ன கையைச் சுரண்டுகிறான்” “தலையைச் சுரண்டுகிறானே என்ன” என்பவை எத்தனையோ எதிர்பார்த்து நிற்பதைச் சுட்டும் குறிப்புகளாம். என்ன வேண்டும் என்று கேட்டு வழங்குவதுண்டு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்