சொல் பொருள்
சுருத்து என்பது அன்பு என்றும், அக்கறை என்றும் பொருள் கொள்ளும் சொல்லாகத் தென்னகத்து வழக்கில் உள்ளது
சொல் பொருள் விளக்கம்
சுரிதல் என்பது சுழல்தல். சுரிதகம் என்பது கலிப்பா உறுப்புகளின் முடிநிலை. சுரிந்து என்பதும் அது. ஒன்றைச் சுற்றிச் சூழ்ந்து வருதல் அதன்மேல் உள்ள அன்பு அக்கறை ஆயவற்றால் ஏற்படும். சுருத்து என்பது அன்பு என்றும், அக்கறை என்றும் பொருள் கொள்ளும் சொல்லாகத் தென்னகத்து வழக்கில் உள்ளது. “அவன் என்மேல் சுருத்தானவன்” என்பர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்