சொல் பொருள்
சுள்ளாப்பு – தொடுகறி
சொல் பொருள் விளக்கம்
சுள்ளென்று வெயிலடித்தல், சுள்ளென்று உழைத்தல் எனச் சொல்வது வழக்கு. சுள்ளென்று உறைப்பது மிளகு, மிளகாய் என்பவை. அவ்வாறு உறைப்புமிக்க கறியும் சுள்ளாப்பு எனப்படும். கள் சாராயம் குடிப்பவர் குடிக்குத் துணைப் பொருளாகப் பயன்படுத்தும் உறைப்பான கறிகள் சுள்ளாப்பு என வழங்கப்படுகிறது. ஆனால் வீட்டில் தொடுகறியாகப் பயன்படுத்தப்படுவன அவ்வாறு அழைக்கப்படுவது இல்லை. இது குடியர் வழக்காம். சில இடங்களில் அடித்தல் பொருள் அதற்கு உண்டு. சுள்ளாப்பு வைத்தால்தான் சொன்னது கேட்பாய் என்பர்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்