சொல் பொருள்
சூடுபடுதல் – அஞ்சுதல்
சொல் பொருள் விளக்கம்
சூடுகண்ட பூனை பாலைப் பார்த்ததும் ஓடுதல் விகட ராமன் கதை, “பன்றி வேட்டையில் வெகுண்டு வந்த நாய் சோற்றுப் பானையைக் கண்டு ஓட்டம் பிடித்தது” என்பது பழமொழி. நாயால் கடியுண்டவன் நாயைக் கண்டாலே கடியுண்ட உணர்வினனாதல் உளவியல். இவற்றைப் போல்வதே சூடுபடுதலாம். விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் கையை எடுப்பதைப்போல் என உவமை காட்டினார் பாவேந்தர். சூடுபட்ட பட்டறிவு இருந்தால் சுடு பொருளைக் கண்ட அளவானே அஞ்சுதல் கண்கூடு. இவ்வகையால் சூடுபடுதல் என்பற்கு அச்சப் பொருள் உண்டாயிற்றாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்