சொல் பொருள்
சூடுபிடித்தல் – கிளர்ச்சியுண்டாதல்
சொல் பொருள் விளக்கம்
பச்சை விறகில் பற்றிய தீ உடனே சூடுபிடித்து எரிவது இல்லை. பற்றிப் பற்றி எரிந்து சூடுபிடித்துவிட்டால் பின்னர் அனல் கக்கி எரியும். அவ்வாறு சிலர் உள்ளமும் அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்கும். ஆனால் அவ்வமைதியும் அடக்கமும் வேளைவரும்போது இருந்த இடமும் தெரியாமல் மறைந்து போம். கிளர்ச்சியுண்டாகிய அந்நிலையைச் சூடுபிடித்தல் என்பது வழக்கு. இப்பொழுதுதான் வேலை சூடுபிடித்திருக்கிறது; விளையாட்டு சூடு பிடித்திருக்கிறது என்பது நடைமுறை. சுறுசுறுப்பு அல்லது கிளர்ச்சி உண்டாகிவிட்டது என்பது பொருளாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்