சொல் பொருள்
உள்ளே பூச்சி துளைத்துச் செல்லும் கேடு சூன் எனப்படும்.
சொல் பொருள் விளக்கம்
உள்ளே துளைத்தல் சூலல் ஆகும். சுழன்று துளைத்தல் அது. சூல்நோய், சூலை நோய் என்பவை அவ்வாறு குடரைச் சுழற்றி வலியூட்டுவதால் பெயர் கொண்டவை. சூலம் என்பது கருவிப் பெயர். சூல் > சூன் ஆகும். உள்ளே பூச்சி துளைத்துச் செல்லும் கேடு சூன் எனப்படும். இது தென்னக வழக்குச் சொல். சூத்தை என்பதும் அதன் வழி ஏற்பட்ட சொல்லாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்