சொல் பொருள்
(பெ) 1. சரிசெய்தல், 2. நேரான பாதை
சொல் பொருள் விளக்கம்
1. சரிசெய்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
repairing, straight path
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கள்வர் பொன் புனை பகழி செப்பம் கொள்-மார் உகிர் நுதி புரட்டும் ஓசை போல – குறு 16/1-3 கள்வர்கள் இரும்பினால் செய்த அம்பினைச் செப்பம் செய்யும்பொருட்டு (தம்)நகத்தின் நுனியில் புரட்டும் ஓசை போல, நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின் – மலை 197 அடுத்தடுத்துப் பலர் புழங்காத நேரான பாதைகளில் போகத் துணிந்தால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்