சொல் பொருள்
1. (வி) 1. குற்றம் செய், 2. வருத்து, 3. கோபங்கொள்,
2. (பெ) 1. குற்றம், பிழை, 2. வருத்துதல், 3. கோபம், சினம்
சொல் பொருள் விளக்கம்
1. குற்றம் செய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
commit an offence, cause pain, afflict, be angry with, fault, blemish, afflicting, anger, rage
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய செல்வ – பொரு 120,121 குற்றத்தைச் செய்து எழுந்த பகைவரிடம் திறைகொள்ளும் முறைகளில் தேர்ச்சிபெற்ற செல்வனே, அகறிரோ எம் ஆயம் விட்டு என சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு – பொரு 123,124 போகின்றீரோ (எம்)கூட்டத்தைவிட்டு’ என்று கூறி வெகுண்டவனைப் போன்று (எமக்கு)வருத்தத்தைச் செய்த பார்வையுடன், செம் கண்ணால் செயிர்த்து நோக்கி – பட் 280 (தன்)சிவந்த கண்ணால் வெகுண்டு பார்த்து, சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 19 தொலைதூரத்தையும் கடந்து விளங்கும் குற்றம் தீர்ந்த நிறத்தினையும் உடைய சூரர மகளிர் செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின் – கலி 20/2 கடிதாய்ச் செல்கின்ற கதிர்களையுடைய ஞாயிறு, வருத்துகின்ற நெருப்பைக் கக்குவதால், செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் – நற் 298/2 செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்