சொல் பொருள்
1 (வி) 1. பெருமிதம்கொள், 2. களிப்படை
2. (பெ) களிப்பு
சொல் பொருள் விளக்கம்
1. பெருமிதம்கொள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be proud, exult, exultation
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி – பொரு 140 இளமை(பொங்கும்) தோள்களின் மிகுந்த வலிமையால் பெருமிதம்கொண்டு இரு மடை கள்ளின் இன் களி செருக்கும் வன்_புல காட்டு நாட்டதுவே – நற் 59/5,6 பெரிய கலத்தில் கள்ளைப் பருகி அதன் மயக்கத்தில் களித்திருக்கும் வன்புலமாகிய காடுகளைக் கொண்ட நாட்டில் உள்ளது பழம் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர – மலை 173 பழைய களிப்பினால் அடைந்த உமது போதைமயக்கம் தீரும்படி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்