சொல் பொருள்
(பெ) 1. போக்கு, 2. பயணம், 3. ஓட்டம்
சொல் பொருள் விளக்கம்
1. போக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
going, passing, journey, running
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோடு கொண்டு எழுந்த கொடும் செலவு எழிலி – முல் 5 மலைகளை(இருப்பிடமாக)க் கொண்டு எழுந்த விரைவான போக்கினையுடைய மேகம்- குன்று உடை அரும் சுரம் செலவு அயர்ந்தனையே – ஐங் 307/2 குன்றுகளையுடைய கடத்தற்கரிய பாலை வழியில் பயணம் மேற்கொண்டாய் வெருவரு செலவின் வெகுளி வேழம் – பொரு 172 அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்