சொல் பொருள்
(பெ) வளர்ப்புத்தாய்,
சொல் பொருள் விளக்கம்
வளர்ப்புத்தாய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
foster mother
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர் தளர் நடை வருத்தம் வீட அலர் முலை செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து – பெரும் 249-251 (ஏறி)ஊரப்படாத நல்ல சிறு தேரை உருட்டிக்கொண்டு திரிந்த பிள்ளைகள் (தமது)தளர் நடை(யால் உண்டான) வருத்தம் நீங்கும்படி, பரந்த முலையினையுடைய செவிலித் தாயாராகிய அழகிய மகளிரைத் தழுவிக்கொண்டு, பாலை நிரம்ப உண்டு,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்