சொல் பொருள்
தருமபுரி வட்டாரத்தில் குழந்தையைச் சேக்காய் என்று வழங்குகின்றனர். சேர்ந்து கொள்ளும் – ஒட்டிக் கொள்ளும் தன்மையினது என்பது பொருள்.
சொல் பொருள் விளக்கம்
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி. குழந்தையை விரும்பி அரவணைத்து அது விரும்புவதைத் தந்து வந்தால் எந்தப் பிள்ளையும் உறவாகிவிடும். வெள்ளை நிறத்தில் எந்த நிறமும் படிவது போல் பிள்ளை மனமும் விரும்புபவர் மேல் படியும். அதனால் தருமபுரி வட்டாரத்தில் குழந்தையைச் சேக்காய் என்று வழங்குகின்றனர். சேர்ந்து கொள்ளும் – ஒட்டிக் கொள்ளும் தன்மையினது என்பது பொருள்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்