சொல் பொருள்
(பெ) துயிலிடம், படுக்கை, கட்டில், உறைவிடம்,
சொல் பொருள் விளக்கம்
துயிலிடம், படுக்கை, கட்டில், உறைவிடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cot, bed, couch, dwelling place
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து தோடு அமை தூ மடி விரித்த சேக்கை – நெடு 134,135 கஞ்சி போட்டு வெளுக்கப்பட்ட துகிலின் மலரிதழ்கள் வைத்து(மணமூட்டப்பட்ட)தூய மடியினை விரித்த படுக்கையின்கண் செ வரை சேக்கை வருடை மான் மறி – குறு 187/1 செம்மையான மலையை உறைவிடமாகக்கொண்ட வருடைமானின் குட்டி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்