சொல் பொருள்
(வி) ஒரு சோழ மன்னன்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சோழ மன்னன்,
புறம் 27-இல் குறிக்கப்பெறும் இவன் சோழன் நலங்கிள்ளி எனப்படுவான். சோழநாட்டு மன்னன். இவனைச்
சான்றோர் சேட்சென்னி நலங்கிள்ளி என்றும் கூறுவர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A Chozha King
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துபஎன்ப தம் செய்வினை முடித்து என கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி – புறம் 27/7-10 புலவரால் பாடப்பெறும் புகழையுடையோர் ஆகாயத்தின்கண் பாகனாற் செலுத்தப்படாத விமானத்தைப் பொருந்துவார் என்று சொல்லக் கேட்பேன், என்னுடைய இறைவ, சேட்சென்னி நலங்கிள்ளியே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்