Skip to content
சேம்பு

சேம்பு என்பது சேப்பங்கிழங்கு

1. சொல் பொருள்

(பெ) ஒரு செடி, சேப்பங் கிழங்கு

2. சொல் பொருள் விளக்கம்

இதன் கிழங்குகளும் இலைகளும் உண்பதற்கு ஏற்றவை. இந்த சேம்பு செடிகள் குத்துகுத்தாக, மஞ்சள் செடிகளைப் போன்றே வளரும். இந்த செடியின் அடியில் விளையும் கிழங்கு சேப்பங்கிழங்கு எனப்படும்.

சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கு

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

indian kales, Colocasia esculenta, Colocasia antiquorum, Typhonium flagelliforme

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

சேம்பு
சேம்பு
சேம்பு
சேம்பு
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி – அகம் 178/4,5

நீலமணியைப் போன்ற நிறத்தினையுடைய அகன்ற இலையினையுடைய சேம்பின்
பிண்டித்து வைத்தாற்போன்ற செழுமையான கிழங்கினை நிறையத் தின்று

தீம் பல் தாரம் முனையின் சேம்பின்/முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல் - பெரும் 361,362

முதல் சேம்பின் முளை இஞ்சி - பட் 19

சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை - குறு 76/3

கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகா - கலி 41/2

நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்/பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி - அகம் 178/4,5

குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை - அகம் 336/1

அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் - பதி 24/20

சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் - மலை 343
சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கு
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே - தேவா-சுந்:468/3

சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே - தேவா-அப்:2845/4

சேம்பு கால் பொர செங்கழுநீர் குள - பால:2 35/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *