சொல் பொருள்
சேர்க்கை – நட்பு, தொடர்பு
சொல் பொருள் விளக்கம்
சேர்ந்திருக்கும் தன்மை சேர்க்கை. சேர்க்காளி, சேத்தாளி என்பனவும் சேர்ந்திருத்தலே. இவையெல்லாம் நட்பைக் குறிப்பனவே. சேக்கை என்பது குச்சி பஞ்சு நார் முதலியவை சேர்த்தமைக்கப்பட்ட கூடாகும். கடற்கரையைச் சேர்ந்துள்ள இடம் சேர்ப்பு எனப்படும். அதற்குரிய தலைவன் ‘சேர்ப்பன்’ எனப்பட்டான். சேரன், சேரல் சேரலன் என்பனவெல்லாம் கடற்கரையைச் சார்ந்த நாட்டினன் என்னும் குறிப்புடையதேயாகும். இச்சேர்த்தல் என்பது நட்பைக் குறித்து வருதல் வழக்காயிற்று. “உன் சேர்க்கைதான் உனக்குக் கேடு பார்த்துக் கொண்டிரு” என்பது எச்சரிப்புரை.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்