1. சொல் பொருள்
(பெ) பல பறவைகளின் ஆண்,
2. சொல் பொருள் விளக்கம்
பல பறவைகளின் ஆண்,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
the male of many birds
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வண்டு – கொங்கு கவர் நீல செம் கண் சேவல் – சிறு 184 புறா – இறை உறை புறவின் செம் கால் சேவல் – பெரும் 439 கம்புள் – கம்புள் சேவல் இன் துயில் இரிய – மது 254 அன்னம் – செம் கால் அன்னத்து சேவல் அன்ன – மது 386 காட்டுக்கோழி – கான கோழி கவர் குரல் சேவல் – மலை 510 குருவி – உள் இறை குரீஇ கார் அணல் சேவல் – நற் 181/1 கடல்காக்கை – கடல் அம் காக்கை செ வாய் சேவல் – நற் 272/1 பருந்து – எருவை சேவல் கிளை_வயின் பெயரும் – நற் 298/4 கூகை – கூகை சேவல் குராலோடு ஏறி – நற் 319/4 காடை – பொறி புற பூழின் போர் வல் சேவல் – புறம் 321/1 கழுகு – அழல் போல் செவிய சேவல் ஆட்டி – நற் 352/4 வீட்டுக்கோழி – தொகு செம் நெற்றி கணம்_கொள் சேவல் – குறு 107/2 நீர்க்கோழி – நீர் உறை கோழி நீல சேவல் – ஐங் 51/1 யானையங்குருகு – யானையங்குருகின் சேவலொடு காமர் – மது 674 குயில் – சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில் – நற் 118/3 அன்றில் – சேவலொடு புணரா சிறு கரும் பேடை – அகம் 270/13
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்