சொல் பொருள்
சொங்கி என்பது பயனற்றவன் என்னும் பழிப்புப் பொருளில் நெல்லை வழக்கில் உள்ளது
சொங்கி – உள்ளீடு இல்லாமை, வெறுமை.
சொல் பொருள் விளக்கம்
உள்ளீடு அற்றதைப் பதர் என்பது பொது வழக்கு. உள்ளீடு இல்லாத கதிரைச் சொங்கு என்பது நெல்லை வழக்கு. சொங்கி என்பது பயனற்றவன் என்னும் பழிப்புப் பொருளில் நெல்லை வழக்கில் உள்ளது. சோளத்தின் மேலொட்டிய தோல் ‘சொங்கு’ எனப்படும். அதனால் சொங்குச் சோளம் என்றொரு சோள வகையும் உண்டு.
சோளத்தின் மணியை ஒட்டிக் கொண்டிருக்கும் மூடியைச் சொங்கு என்பது வழக்கம். மணியொடு பிரியாமல் சொங்கு இருப்பது, சொங்குச் சோளமாம். பால் பிடிக்காமல் மூடிதழோடு ஒட்டியிருக்கும் சோளமும் சொங்கு எனப்படும். அச்சொங்கு உள்ளீடு இன்மையால் சோற்றுக்குப் பயன்படாது. தூற்றும்போதே காற்றில் அப்பால் போய் விழும். சிலரை அவர்தம் சோம்பல் செயற்பாடு பயன் ஆகியவை கருதிச் சொங்கி என்பது வழக்கு. ‘சொங்கிப் பயல்’ ‘சொங்கித்தனம்’ என்பவை சொங்கியின் வழக்கினைத் தெரிவிக்கும். சொங்கில் இருந்து வந்ததே சொங்கி என்க.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்