சொல் பொருள்
முடி முழுமையாக உதிர்தல் மொட்டை. ஆங்கு ஆங்கு உதிர்ந்து வழுக்கை ஆதல் சொட்டை
சொல் பொருள் விளக்கம்
சொட்டுதல், துளிதுளியாக நீர் விடுதல் ஆகும். “சொட்டுச் சொட்டாக எண்ணி நான்கு சொட்டு விட்டுக் குடி” என்பது மருத்துவ வழக்கு. பயிர் நிலத்தின் ஒருபகுதியில் முளையாமலோ, கருகியோ போய் விட்டால் “என்ன சொட்டையா?” என்பர். முடி முழுமையாக உதிர்தல் மொட்டை. ஆங்கு ஆங்கு உதிர்ந்து வழுக்கை ஆதல் சொட்டை. மயிர் சொட்டி விட்டதால் ஏற்பட்ட பெயர். இது பொது வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்