சொல் பொருள்
சொறி சிரங்கு – பெருஞ்சிரங்கு.
அரிசிரங்கு – சிறு சிரங்கு.
சொல் பொருள் விளக்கம்
முன்னது இடைவெளிப்படப் பெரிது பெரிதாக கிளம்பும்; நீரும் புண்ணும் உண்டாம்.
பின்னது இடைவெளியின்றி வியர்க்குரு போல இருக்கும். ஓயாமல் அரித்தலால் தேய்த்துக் கொண்டிருக்க நேரும்.
சொறி சிரங்கன் சொறியாமல் இருந்தாலும் இருக்கலாம்; ஆனால் அரி சிரங்கன் சொறியாமல் இருக்க முடியாது. ஆதலால் “சொறி சிரங்கனை நம்பினாலும் அரிசிரங்கனை நம்பக் கூடாது” என்பர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்