Skip to content

சொல் பொருள் விளக்கம்

மாங்காய்

சொல் பொருள் ஆட்டின் சிறு நீரகம் சொல் பொருள் விளக்கம் மாவின் காய் என்னும் பொதுப் பொருளில் வழங்காமல் மாங்காய் என்பது ஆட்டின் சிறு நீரகத்தைக் குறிப்பதாகப் புலவுக் கடையினர் வழங்குகின்றனர். இது உவமை… Read More »மாங்காய்

மாக்கான்

சொல் பொருள் தவளை சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்டத்தில் மாக்கான் என்பது தவளை என்னும் பொருளில் வழங்குகின்றது. மணற்கானல் என்பது மணக்கான் மாக்கான் ஆகியிருக்கக் கூடும். தவளை மணல் நிறத்தது; மணலில் வாழ்வது.… Read More »மாக்கான்

மன்னுதல்

சொல் பொருள் நிறைதல், நிரம்புதல், நிலைபெறல் சொல் பொருள் விளக்கம் தவசத்தைக் கோணிகளில் போடும் போது, இடைவெளி இருந்தால் போடும் பொருள் அளவு சிறுத்துப் போகும். நிரம்பவும் இடை வெளியின்றிப் போட, இப்படியும் அப்படியும்… Read More »மன்னுதல்

மறுமாற்றம்

சொல் பொருள் பதில் சொல்லுதல், தொடுகறி சொல் பொருள் விளக்கம் பதில் சொல்லுதல் மறுமொழி என்றும், மறுமாற்றம் என்றும் சொல்லப்படும். அது பொதுவழக்கு. இலக்கிய வழக்கும் உடையது. உசிலம்பட்டி வட்டாரத்தில் சோற்றுடன் உண்ணும் தொடுகறி… Read More »மறுமாற்றம்

மள்ளு

1. சொல் பொருள் சிறுநீர் 2. சொல் பொருள் விளக்கம் மள்ளு என்றும் மண்டு என்றும் வழங்கும் வழக்குச் சொல் சிறுநீர் என்னும் பொருள் தருவதாகக் கொங்கு நாட்டு வழக்கில் உள்ளது. கொள்ளும் கொண்ம்… Read More »மள்ளு

மழைத்தாள்

சொல் பொருள் மழைப் போதில் தலை முதல் உடல் மறையாகப் பயன்படுத்துவது சொல் பொருள் விளக்கம் பால்தாள் எனப் பொதுமக்களால் வழங்கப்படும், பாலிதீன் நீர்க்காப்பாக இருப்பது. மழைப் போதில் தலை முதல் உடல் மறையாகப்… Read More »மழைத்தாள்

மலையடி

சொல் பொருள் மலையின் அடிவாரம், கொசுக்கடி சொல் பொருள் விளக்கம் மலையின் அடிவாரத்தைக் குறிப்பது பொது வழக்கு. மலையடிக் குறிச்சி என ஊர்ப் பெயரும் உண்டு. திண்டுக்கல் வட்டாரத்தில் மலையடி என்பது கொசுக்கடி என்னும்… Read More »மலையடி

மலரணை

சொல் பொருள் ஒருவருக்கு உரிமைப்பட்ட சொத்தை இன்னொருவருக்கு உரிமைப்படுத்துவதாகச் சொல்லி எழுதிவைப்பது மலரணை எனப்படும் சொல் பொருள் விளக்கம் ஒருவருக்கு உரிமைப்பட்ட சொத்தை இன்னொருவருக்கு உரிமைப்படுத்துவதாகச் சொல்லி எழுதிவைப்பது மலரணை எனப்படும். மலர்தல்=சொல்லுதல்; திருவாய்… Read More »மலரணை

மருந்து

சொல் பொருள் பிணிநீக்கி, நஞ்சு சொல் பொருள் விளக்கம் மருந்து என்பது பிணிநீக்கியைக் குறித்தல் பொது வழக்கு. ஆனால் மருந்து என்பது நஞ்சு என்னும் பொருளில் மருந்தைக் குடித்துச் செத்து விட்டான்(ள்) என்பதில், மருந்து… Read More »மருந்து

மரிச்சி

சொல் பொருள் மரியாதை சொல் பொருள் விளக்கம் மதிப்புக்கு உரியவர்களுக்குத் தரும் சிறப்பை ‘மரியாதை’ என்பர். அம் மரியாதைப் பொருளில் மரிச்சி என்பதை மூவிருந்தாளி வட்டாரத்தார் வழங்குகின்றனர். மதிப்பு என்பது மரிச்சி ஆகவும் கூடும்.… Read More »மரிச்சி