Skip to content
சோணை

சோணை என்பது கங்கையொடு கலக்கும் ஒரு ஆறு

1. சொல் பொருள்

(பெ) பாடலிபுத்திரத்துக் (தற்கால பாட்னா) கருகில் கங்கையொடு கலக்கும் ஒரு ஆறு.

2. சொல் பொருள் விளக்கம்

நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எயுதினும், மற்று அவண்
தங்கலர் வாழி, தோழி
மாமூலனார் – அகம் 251

மௌரியர்களுக்கு முன் பாடலிபுரத்தில் இருந்து ஆட்சிபுரிந்த நந்த அரச வம்சத்தைச் சேர்ந்த தனநந்தன் என்பவன் தனது பெருஞ்செல்வத்தைக் கங்கையாற்றில் மறைத்து வைத்திருந்தான் என்று கூறப்படுவதுண்டு. நந்தனின் செல்வத்தையே பெற முடிந்தாலும் உன் காதலன் உனது துன்பம் பற்றிக் கேள்விப்பட்ட பின்னர் அங்கிருக்க மாட்டான் என்று தோழி தன் தலைவியைத் தேற்றுவதாக ஒரு பாடல் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

சோணை
சோணை

பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை
நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ – அகம் 265/4-6

பல்வகைப் புகழும் மிக்க போர் வெல்லும் நந்தர் என்பாரது
சிறப்பு மிக்க பாடலிபுரத்திலே திரண்டிருந்து கங்கையின்
நீர் அடியில் மறைத்துவைத்த செல்வமோ?

பாடலிபுரம் என்று அறியப்பட்ட நகரின் செல்வம் பற்றியும் அந்நகரை வளம்படுத்தும் சோணை ஆறு பற்றியும் குறுந்தொகையிவ வரும் பாடல் ஒன்று பேசுகின்றது. திரவியம் தேடுவதற்காகத் தன்னைப் பிரிந்து சென்ற காதலன் என்று வருவான் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள் அந்த இளம்பெண். யார் யாரோ வந்து சொல்கின்றார்கள். உன் காதலனை அங்கு கண்டேன்; இங்கு கண்டேன்; அவன் விரைவிவ வந்துவிடுவான் என்றெல்லாம் கூறுகின்றார்கள். ஆனால் இன்றுவரை அவன் வரவிவலை. அவள் இனி எவரையும் நம்பத் தயாரில்லை. எவலோரும் தனக்கு ஆறுதலளிக்க அவ்வாறு பொய் சொல்லுகின்றார்கள் என்று அவள் நினைக்கின்றாள். அந்த நேரத்திவ அவளுக்கு நம்பிக்கையான ஒருவர் வருகின்றார். உன் காதலன் உன்னிடம் வந்து கொண்டிருக்கின்றான் என்கிறார் அவர். கடந்தகால அனுபவம் அவளை நம்பவைக்க மறுக்கின்றது.

“அவர் வருவதை நீ கண்டாயா அல்லது ஆரும் கண்டவர் சொல்லக் கேட்டாயா? தெளிவாக நீ அறிந்ததைச் சொல். வெண்ணிறத் தந்தங்களையுடைய யானைகள் குளிக்கும் சோணை நதி தவழும் பொன் நிறைந்த பாடலிபுரத்தைப் பெறுவாய். என் காதலர் வரவை யார் சொல்லக் கேட்டாய்?” என்கிறாள் அவள். படுமரத்து மோசிகீரனார் என்னும் புலவர் பாடிய பாடல்(குறுந்தொகை 75) இது.

சோணை
சோணை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

The river Son, Sōnai river in patna, Sone River, which falls into the Ganges near Paataliputra

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட்டு யானை, சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார் வாய்க் கேட்டனை, காதலர் வரவே? – குறு 75/3

“அவர் வருவதை நீ கண்டாயா அல்லது ஆரும் கண்டவர் சொல்லக் கேட்டாயா? தெளிவாக நீ அறிந்ததைச் சொல். வெண்ணிறத் தந்தங்களையுடைய யானைகள் குளிக்கும் சோணை ஆறு தவழும் பொன் நிறைந்த பாடலிபுரத்தைப் பெறுவாய். என் காதலர் வரவை யார் சொல்லக் கேட்டாய்?” என்கிறாள் அவள். படுமரத்து மோசிகீரனார் என்னும் புலவர் பாடிய பாடல் இது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *