சொல் பொருள்
(வி) சங்கு எழுப்பும் ஓசை,
சொல் பொருள் விளக்கம்
சங்கு எழுப்பும் ஓசை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sound of a conch
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் தண் கடல் படப்பை மென்பாலனவும் – பதி 30/6-8 தாழ்வாகப் படர்ந்திருக்கும் அடும்பங்கொடியை மோதிய அலை கொண்டுவந்த சங்கு ஒலிக்க, ஒளிரும் தன்மையுள்ள முத்துக்களோடு, நீண்ட பவளக்கொடிகளையும் பொறுக்கியெடுக்கும் குளிர்ந்த கடல் வெளியாகிய மென்மையான நிலமாகிய நெய்தல் நில மக்களும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்