சொல் பொருள்
(பெ) 1. நூல், கயிறு, 2. வில்லின் நாண்,
சொல் பொருள் விளக்கம்
நூல், கயிறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
thread, string, cord, bowstring
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் புலரா காழகம் புலர உடீஇ – திரு 183,184 ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய, ஈரம் காயாத துகில் புலர உடுத்தி வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ – அகம் 61/7 மாண்புறு வரியையுடைய வலிய வில்லில் வலிய நாணினைக் கொளுத்தி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்