சொல் பொருள்
தீக்கொள்ளி, தீக்கடைகோல்
சொல் பொருள் விளக்கம்
தீக்கொள்ளி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
firebrand, Piece of wood used for kindling fire by friction
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம் நுண் அவிர் புகை கமழ கை முயன்று ஞெலி_கோல் கொண்ட பெரு விறல் ஞெகிழி செம் தீ தோட்ட கரும் துளை குழலின் – பெரும் 177-179 அழகிய நுண்ணிதாய் விளங்கும் புகை முற்படப் பிறக்கும்படி கையாலே கடைந்து, தீக்கடையப்படும் கோலால் உண்டாக்கிக்கொண்ட பெரிய திறலுடைய கொள்ளிக்கட்டையின் சிவந்த நெருப்புத் துளைத்த கரிய துளையினையுடைய குழலில் குன்றிமணி போன்ற கண்களையும், நல்ல நிறம் வாய்ந்த மயிரையும் மெல்லிய கால்களையும் தாடியினையுமுடைய ஆண் வெள்ளெலி கானவர் விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 225,226 காட்டில் வாழ்வோர் வானத்தைத் தீண்டுகின்ற (தம்)பரணில் தீக்கடைகோலை மூட்ட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்