சொல் பொருள்
(பெ) 1. உலோகத்தட்டு, 2. பூவின் புறவிதழ்
சொல் பொருள் விளக்கம்
1. உலோகத்தட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
metal plate, outer petal of a flower
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து – நெடு 126,127 புலியின் உருவம் பொறிக்கப்பட்ட பொலிவு பெற்ற நிறத்தையுடைய தட்டம் போன்ற தகடுகளால் நடுவுவெளியான இடம் மறையும்படி கோக்கப்பட்டு, குற்றமற்று முள் சினை முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி – பெரும் 214,215 முள்ளையுடைய கொம்புகளையுடைய அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்