சொல் பொருள்
தக்குதல் – அடி இடறுதல்
முக்குதல் – மூச்சுத் திணறுதல்.
சொல் பொருள் விளக்கம்
உடல் பருத்தும் அகவை முதிர்ந்தும் உள்ளவர் உயரமான இடத்திற்கு ஏறுவது கடுமையானது. அப்படி ஏறுங்கால் அடி தள்ளாடுதலும், மூச்சு இரைத்தலும் உண்டாம். அந்நிலையில் அவர் ‘தக்கி முக்கி’ ஏறுவார். இதனைத் தத்தி முத்தி’ என்பதும் உண்டு.
தக்கு-தடை, தடுப்பு, தாழ்வு என்னும் பொருளது.
முக்கு – மூச்சு முட்டுதல், பெரு மூச்சு வாங்குதல், மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குதல் என்னும் பொருளது.
வடக்கு உயரத் தாழ்ந்த தெற்கு தக்கணம் எனப்படுவதறிக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்